‘சோலைகளும் நீர்வளமும் சோடையிலாக்
கானவளமும், சீரிய கால் நடையோடு
சிறந்த புல்வெளி அழகும் சில்லென்று வீசும்
குளிர்ந்த காற்றும்! வாழ்வாங்கு மக்களை
வாழவைக்கும் பெருமானே!

எமது தேவஸ்தான 60 வருட கால முன்னாள் பிரதமகுரு இவ்வாலயத்தின் நித்திய, நைமித்திய கிரிகைகள், கார்த்திகைத் திருவிழா, தைப்பூசத் திருவிழா, கந்தஷஷ்டி, விசாகதினம், திருவெம்பாவை ஆகியன ஆலய பிரதமகுரு பிரம்மஸ்ரீ சுப்பிரமணியக்குருக்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்று வந்தன. மிக நீண்ட காலமாக முருகனுடன் தனியாக உறவு வைத்து அர்ச்சிக்கும் ஆலய குருவாக உள்ளதோடு ஆலயத்தையே தன் வீடு எனக்கருதி வாழ்ந்து வரும் அளப்பெரிய குருவாகவும் இவர் இன்றுவரை மிளிர்கிறார்.
2015இல் தொடக்கப்பட்ட பெருந் திருப்பணி நிறைவிற்கு வந்தது. இந்நிலையில் பிரம்மஸ்ரீ தி. சுப்பிரமணியக்குருக்களின் மேற்பார்வையில் ஆலய நித்திய, நைமித்திய குருக்களாக பிரம்மஸ்ரீ தேவபிரசன்னக் குருக்கள் நியமிக்கப்பட்டு அவரது தலமையில் நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய பிரதமகுருக்களில் ஒருவராக விளங்கிய பாலகணேஸ்வரக் குருக்கள் கும்பாபிஷேக் குருக்களாக நியமிக்கப்பட்டு மிகச் சிறப்பாக 2023.06.09 அன்று நடைபெற்றது.

ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள்

முன்வரிசை:   

திரு. சு. சுகீரதன் (உப தலைவர்), திரு. கு. சதாசிவமூர்த்தி (தலைவர்), திரு. நா. செ. நடராசா (செயலாளர்), திரு. க. இந்திரகுமார் (உப செலாளர்), திரு. ச. ஆனந்தகுமார் (பொருளாளர்)

பின்வரிசை: 
திரு. பொ. குமாரசாமி (உறுப்பினர்). திரு. க. கனகசபாபதி (உறுப்பினர்). திரு. பொ. கனகரத்தினம் (உறுப்பினர்). திரு. கு. விஸ்வலிங்கம் (உறுப்பினர்) திரு. மா. தயாக்குமரன் (உறுப்பினர்). திரு. ச. உருத்திரமூர்த்தி (உறுப்பினர்). திரு. ஆ. நவநீதன் (உறுப்பினர்). திரு. சு. ஜெயறூபன் (உறுப்பினர்) திரு. பொ. கதிர்காமலிங்கம் (உறுப்பினர்), திரு. தி வேலாயுதபிள்ளை (உறுப்பினர்). திரு. க. திருநீபன் (உறுப்பினர்)